அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: -வஞ்சிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, சாமந்தங்கோட்டை, செம்மாண்டம்பாளையம், கோதபாளையம், காவிலிபாளையம், வெங்கமேடு, வளையம்பாளையம், அனந்தபுரம், முருகம்பாளையம், சோளிபாளையம், ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.