திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரேவிடம் சுப்பராயன் எம்.பி. ஒரு மனு அளித்தார். அதில், தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ. 3 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படுகிறது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில், கைரேகை பதியாததால், தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கத்தைப் பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, அனைவருக்கும் பொங்கல் பரிசு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.