போலீஸ் வாகனங்கள் ஆய்வு

திருப்பூர் மாவட்ட போலீஸ் துறையில் பயன்பாட்டில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கார்களை, போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் நேற்று ஆய்வு செய்தார். போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் முகப்பு விளக்கு, சைரன், சிக்னல் விளக்குகள் சரியாக செயல்படுகிறதா என அவர் பார்வையிட்டு டிரைவர்களிடம் விளக்கம் கேட்டறிந்தார். இந்த ஆய்வு மாதம் ஒருமுறை நடைபெறும் வழக்கமான பணியாகும்.

தொடர்புடைய செய்தி