கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த ரகு (30) மற்றும் அவரது மனைவி ஜோதி (20) காதல் திருமணம் செய்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக ஜோதி, தனது தாயாருடன் திருப்பூரில் வந்து வசித்து வந்தார். ஜோதி திருப்பூரில் இருப்பதை அறிந்த ரகு, நேற்று (ஏப்ரல் 8) அங்கு வந்து மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதத்தின் போது, ரகு தனது மனைவி ஜோதியை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து கணவன் ரகுவை தேடி வருகின்றனர்.