திருப்பூர் வஞ்சிபாளையம் அருகே உள்ள தண்டவாளத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக நேற்று (டிசம்பர் 25) திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் கருப்பு, பச்சை கட்டம் போட்ட டீ-சர்ட் அணிந்திருந்தார். தொடர்ந்து ரயிலில் அடிபட்டு இறந்தவர் யார்? தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து திருப்பூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்