திருப்பூர்: பொதுமக்களுக்கு கேக் வழங்கிய போலீசார்

2025 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்த நிலையில் திருப்பூர் மாநகரில் விபத்தில்லா திருப்பூர் என்ற நோக்கத்துடன் போலீசார் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்கள். 

2025 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், திருப்பூர் மாநகரில் புத்தாண்டு இரவு டி.ஜே. பார்ட்டிகள் மற்றும் மது விருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிற வகையில் திருப்பூர் மாநகர காவல்துறை மற்றும் விபத்தில்லா திருப்பூர் என்கிற அமைப்பு இணைந்து, திருப்பூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், மாநகராட்சி சிக்னல், வீரபாண்டி பிரிவு உள்பட 14 இடங்களில் பொதுமக்களுக்கு விபத்தில்லாத திருப்பூர் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல்துணை ஆணையர் கிரிஸ் யாதவ் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் ஹெல்மெட் அணிவது, சீட் பெல்ட் அணிவது, மது இல்லாமல் வாகனம் ஓட்டுவது குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் அணில் குமார், காவல் ஆய்வாளர் கணேஷ் குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி