திருப்பூர்: 1ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை; பரபரப்பு வீடியோ

திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று பள்ளிக்கு சென்ற 1ம் வகுப்பு சிறுமி கழிவறைக்கு சென்றபோது துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த நபர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் பெற்றோர் புகாரை தொடர்ந்து இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியான நிலையில் காலை பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கழிப்பறையை முன்புறமாக வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டு வந்தார்கள். தங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட பெற்றோர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டு வந்தவர்களிடம் போலீசார் மற்றும் கல்வி அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்கள். பேச்சுவார்த்தை தோல்வியை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கூண்டுகட்டாக போலீசார் கைது செய்து வான் மூலம் ஏற்றினர். 30-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். கைது நடவடிக்கை அடுத்து கூட்டத்தில் இருந்த பெற்றோர்கள் அனைவரும் அகன்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி