திருப்பூர் மாவட்டம், குருவாயூரப்பன் நகரில் வசித்து வந்த பிளஸ்-2 மாணவி காவியா (17) மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது தந்தை சந்திரசேகர் சில ஆண்டுகளுக்கு முன்பும், தாய் பூங்கொடி கடந்த ஆண்டும் உயிரிழந்த நிலையில், காவியா தனது சித்தி சுதாவுடன் வசித்து வந்துள்ளார். ஊத்துக்குளி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வந்த மாணவி காவியாவின் மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.