திருப்பூர்: குப்பையில் பற்றி எரிந்த தீ கரும்புகையால் மக்கள் அவதி

திருப்பூர்-ஊத்துக்குளி ரோடு டி. எம். எப். பாலம் பகுதியில் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டிருந்த குப்பையில் நேற்று மாலை திடீரென தீப்பற்றியது. இதனால் ஏற்பட்ட கரும்புகை காரணமாக அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. குப்பையை கொட்டி தீ வைப்பவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி