திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழுவில் தீர்மானம் நிறைவேற்றி கொடுக்கப்பட்ட திட்டப் பணிகளை புறக்கணித்து உள்ளதாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் சத்தியபாமா கொடுத்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: - நான் திட்டக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதிலிருந்து ஒரு திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. பின்னர் கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை. மாவட்ட ஊராட்சி செயலர் தேர்வு செய்து அனுப்பிய திட்டப்பணிகள் மாநில திட்டக்குழு மூலம் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு விடப்பட்டது வரை தலைவராகிய எனக்குத் தெரியப்படுத்தவில்லை.
கடந்த மாதம் போடப்பட்ட தீர்மானத்தில் ஒதுக்கப்பட்ட எங்களது பணிகள் நிர்வாக அனுமதி வழங்கப்படாமல் இருப்பதால் பல வழியில் முயற்சி செய்தும் பலன் இல்லை. தொடர்ந்து மாவட்ட திட்டக்குழு பணிகளுக்கு விரைந்து நிர்வாகம் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.