இந்த பகிர்மான வட்டத்தில் 10 உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள், 30 உதவி மின்பொறியாளர்களும் உள்ளனர். 20 துணை மின்நிலையங்கள் உள்ளன. திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் பணியிடம் கடந்த ஓராண்டாக காலியாக உள்ளது. பகிர்மான வட்டத்தில் கடந்த 6 மாதங்களாக செயற்பொறியாளர் பதவியும் காலியாக உள்ளது. பொறுப்பு அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்க முடியாமல் கால தாமதம் ஏற்படுகிறது. இதன்காரணமாக மின்நுகர்வோர்கள் தங்கள் குறைகளை உரிய காலத்தில் நிவர்த்தி செய்ய முடியாமல் உள்ளனர். உடனடியாக காலியாக உள்ள இடங்களுக்கு புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் மருத்துவ, ரத்ததான, சட்ட ஆலோசனை முகாம்