திருப்பூர்: ரயிலில் கஞ்சா கடத்திய.. ஒடிசா வாலிபர் கைது

திருப்பூர் ரயில்வே போலீசார் நேற்று ரயில் நிலையம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சாலிம் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரெயிலில் பொது பெட்டியில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது சந்தேகத்திற்கிடமாக இருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கார்த்திகேய கவுடா (வயது 24) என்பதும், அவரிடம் 2 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. திருப்பூர் ரெயில்வே போலீசார் அவரை திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மாநகர மதுவிலக்கு போலீசார் கார்த்திகேய கவுடாவை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி