திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அமித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநகராட்சியில் பணிபுரியும் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் தங்களது தினசரி பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், கூடுதலாக காலை 6.30 முதல் 10 மணி வரை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் கவுன்சிலர்களுடன் இணைந்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்போது தூய்மைப் பணிகள் மற்றும் மின் விளக்கு வசதிகளில் ஏற்படும் குறைபாடுகளைக் கண்டறிந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.