இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பத்மினி (பொறுப்பு) கூறியதாவது: - கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது கொரோனா தொற்றின் வீரியம் குறைவு. தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இதனால் பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை. மேலும் சுகாதாரத்துறையின் உத்தரவின்பேரில் 30 படுக்கை வசதிகளுடன் கொரோனா வார்டு தயார் செய்யப்பட்டு வருகிறது. அறிகுறி தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மட்டுமில்லாமல் மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சளி, காய்ச்சல் அதிக அளவில் இருந்தால் உடனடியாக தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று அறிகுறி உள்ளவர்களின் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக சென்னை அனுப்பப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது