திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், திருப்பூர் மாநகராட்சி 32-வது வார்டு கோல்டன் நகர் பகுதியில் ரூ. 14 லட்சம் மதிப்பிலும், ஏ. எஸ். பண்டிட் நகரில் ரூ. 13½ லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ. 27½ லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 புதிய ரேஷன் கடைகளை, வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே. என். விஜயகுமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். இந்த திறப்பு விழாவில் 2-வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க., தி.மு.க. நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.