தற்போது கடலோர பாதுகாப்புக் குழு டி.ஐ.ஜி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயந்தி - கடலோர பாதுகாப்புக் குழு டி.ஐ.ஜி. ஆக பணியாற்றும் இவர், சென்னை தொழில்நுட்பப் பிரிவு டி.ஐ.ஜி. ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார். நாகஜோதி - மாநில குற்ற ஆவண காப்பக சூப்பிரண்டான இவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய சூப்பிரண்டாக பொறுப்பேற்பார். வி. கீதா - திருநெல்வேலி மேற்கு துணை கமிஷனராக உள்ள இவர், சேலம் தலைமையக துணை கமிஷனராக பொறுப்பேற்பார்.
சுப்பிரமணிய பாலச்சந்திரா - தேனி உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்று சேலம் தெற்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டிருக்கிறார். சாமுவேல் பிரவீன் கவுதம் - கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரியும் இவர், பதவி உயர்வு பெற்று, திருப்பூர் நகர வடக்கு துணை கமிஷனராக பதவியேற்பார். இவர்கள் உள்பட 18 பேர் மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.