திருப்பூர் மாநகராட்சி 21-வது வார்டு பிச்சம்பாளையம் இட் டெரி ரோட்டில் ஜி. ஏ. என்கிலேவ் அருகில் கந்தசாமி லே-அவுட் தங்கராஜ் ஏற்பாட்டில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள் ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தி. மு. க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் மேயர் ந. தினேஷ்கு மார் கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வடக்கு மாநகர செயலாளர் ஈ. தங்கராஜ் முன் னிலை வகித்தார். ஜி. தங்கராஜ் அனைவரையும் வரவேற்றார். திறப்பு விழாவை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு, பழங்கள், நீர்மோர் வழங்கப்பட்டது.
இதில் தி. மு. க. மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், அண்ணா காலனி பகுதி செயலாளர் மின்னல் அ. நாகராஜ், 22-வது வார்டு கவுன்சிலர் வி. ராதாகிருஷ்ணன், 21-வது வார்டு கவுன்சிலர் பத்மாவதி, 22-வது வார்டு செயலாளர் ராஜ்குமார், மாவட்ட தொண்டரணி துணை செயலாளர் குப்பு சாமி, பகுதி பிரதிநிதி பூபாலன் ரவி, 21-வது வார்டு பொரு ளாளர் வேலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.