திருப்பூர்: கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொலை?

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த கருப்பண்ணன் மகள் அமுதா (வயது 39). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பாகவே இறந்து விட்டார். இதனால் தனிமையில் இருந்த அமுதாவுக்கும், 40 வயது தொழிலாளிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி முதல் அமுதாவை காணவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து உசிலம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. 

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்போது அமுதாவுடன் பழகியவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் கூறிய தகவல் போலீசாரை திடுக்கிடவைத்தது. அமுதாவை திருப்பூர் அழைத்து வந்து கொன்று அவர் அணிந்திருந்த நகைகளை திருடிக்கொண்டு உடலை ஆற்றின் கரையோரம் வீசிவிட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார். உடலை தேடும் போலீசார் இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த ஆசாமியை திருப்பூர் அழைத்து வந்து, திருப்பூர் சென்ட்ரல் போலீசார் உதவியுடன் கொலை செய்யப்பட்டதாக கூறிய இடத்தில் அமுதாவின் உடலை தெற்கு தீயணைப்பு வீரர்கள் உதவியோடு தேடினர். ஆனால் அமுதாவின் உடல் கிடைக்கவில்லை. அவர் மாற்றி, மாற்றி முரணாக கூறிவருவதால் தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி