இன்று திருப்பூர் மேயர் தினேஷ்குமார் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகம், மாமன்ற கூட்டரங்கில், மாமன்ற கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி, திடக்கழிவு மேலாண்மை, பாதாள சாக்கடைத் திட்டங்கள் மற்றும் பல திட்டங்களைப் பற்றி ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. உடன் மாநகராட்சி ஆணையாளர் அமித், துணை மேயர் ரா.பாலசுப்ரமணியம், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.