சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் அக்கட்சி தலைவர் சீமான் தலைமையில், தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார். இதனையடுத்து திருப்பூர் ரயில் நிலையம் பகுதியில் சீமான் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர் ரத்னா மனோகர் தலைமையில் அக்கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் திடீரென திரண்டு போராட்டம் நடத்தினர். ஆவேசமாக போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?