திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து எஸ் பெரியபாளையம் வரை ஊத்துக்குளி ரோடு வழியாக செல்லும் எண் 8 பேருந்து ஊத்துக்குளி சாலை டிஎம்எஸ் பாலம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது அந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவி ஒருவரின் கையை அதே பேருந்தில் மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் பிடித்து இழுத்துள்ளார். மாணவி உடனே கூச்சலிட்டதும் பயணிகள் பேருந்தை அதே இடத்தில் நிறுத்தினர். பயணிகள் மதுபோதையில் இருந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
உடனடியாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் கையைப் பிடித்து இழுத்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் பேருந்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றதால் அங்கு சிறிது பரபரப்பு காணப்பட்டது.