இது குறித்து உடனடியாக தெற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் பஸ் நிலையப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் சந்தேகத்துக்கிடமான நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த தங்கவேல் (57) என்பதும், சுந்தரராஜனிடம் பணத்தை திருடியதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தங்கவேலை போலீசார் கைது செய்து பணத்தை மீட்டனர்.