திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த செய்யது ஆலம் (22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.