திருப்பூர்: புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட ரெயில் நிலையம் பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரக்யானந்தா சேனா (வயது 29) என்பதும், அவரிடம் 3 கிலோ 300 கிராம் புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் அவரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி