திருப்பூர்: ரேஷன் அரிசி 5 டன் பதுக்கல்; ஒருவர் கைது

திருப்பூர் குளத்துப்புதூரில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில், 5 டன் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வெள்ளியங்காட்டைச் சேர்ந்த தங்கபால் (42) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எந்தெந்த பகுதிகளில் அரிசியை விநியோகம் செய்ய திட்டமிட்டிருந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி