திருப்பூர் பெரியார்காலனி பகுதியை சேர்ந்தவர் செந்தில்கு மார் (வயது 42). இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். செந்தில்குமாருக்கும், அவருடைய சகோத ரர் சங்கருக்கும் சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோ தம் இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று செந்தில் குமார் வீட்டிற்கு சென்ற சங்கர், சொத்து பிரிப்பது தொடர் பாக பேசியபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள் ளது. இதில் ஆத்திரமடைந்த சங்கர் செந்தில்குமாரை தகாத வார்த்தைகளில் திட்டியதுடன், சரக்கு ஆட்டோ கண்ணா டியை உடைத்து சேதப்படுத்தினார். இதுகுறித்து செந்தில்கு மார் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.