திருப்பூர்: பெண்ணை தாக்கியவர் கைது

திருப்பூர் செட்டிபாளையத்தை அடுத்த இந்திராநகர் பகு தியை சேர்ந்த பிச்சைமணி. இவருடைய மனைவி பொன் னுத்தாய். இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் பொன்னுத்தாயின் மகள் அவருடைய நண் பருடன் அடிக்கடி செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதை பொன்னுத்தாயின் குடும்ப நண்பரான அரவிந்த் என்ப வர் கண்டித்துள்ளார். இது தொடர்பாக பொன்னுதாயிக்கும் அரவிந்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத் திரமடைந்த அரவிந்த் பொன்னுத்தாயை தகாத வார்த்தை யால் பேசியதுடன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் 15 வேலம்பாளையம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி