புகையிலை பொருட்கள் வைத்திருந்த லாரி டிரைவர் கைது

திருப்பூர் வடக்கு போலீசார் குளத்துப்பாளையம் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்த சுப்பிரமணியம் (50) என்பவர் ஓட்டி வந்த லாரியை நிறுத்தினர். அவரிடம் 500 கிராம் புகையிலை பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சுப்பிரமணியத்தை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி