மேலும் அவரது மனைவி சிவகாமி, மகன் சிவக்குமாரையும் சுட்டதில் அவர்கள் கையில் காயம் ஏற்பட்டது. இதில் அவர்கள் அலறி துடித்து சப்தமிட்டதால் கொள்ளை முயற்சியை கைவிட்டு மூன்று பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திருப்பூர் மிலிட்டரி காலனி பகுதியைச் சேர்ந்த சையத் சலீம் (45) என்ற முன்னாள் ராணுவ வீரரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சலீம் ராணுவத்தில் பணியாற்றியபோது உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அஸ்வின் குமார், மேற்குவங்கத்தைச் சேர்ந்த நாராயணதாஸ் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும்,
இவர்கள் பல்வேறு தொழிலதிபர்கள் வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டதும், முதலில் கருப்பசாமி வீட்டில் கொள்ளை அடிக்க முயன்றபோது அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால் துப்பாக்கியால் சுட்டு தப்பியதை ஒப்புக்கொண்டார். திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணையில் இன்று சையத் சலீமுக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.