குளத்துப்பாளையம் முதல் திம்மநாயக்கன்பாளையம் ரெயில்வே பாலம் வரைக்கும் சுமார் 5½ கிலோ மீட்டர் தொலைவு வரைக்கும் நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வரும் நிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறையினர் நில அளவீடு பணியில் ஈடுபட்டனர். இந்த பணி நிறைவு பெற்று அரசின் ஒப்புதல் கிடைத்த உடன் சாலை விரிவாக்க பணி நடைபெறும்.
இந்த சாலை வழியாக திருப்பூர் மற்றும் ஊத்துக்குளி மார்க் கமாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின் றன. இதனால் இந்த சாலை விரிவாகும் பட்சத்தில் வாகனப் போக்குவரத்து மிகவும் எளிதாகும்.