எந்த ஊருக்கு எப்ப போலாம் பேருந்து நேரங்ம் தெரிந்து கொள்ளுங்கள்

திருப்பூரில் நேற்று திறக்கப்பட்ட கலைஞர் பஸ் நிலை யத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்களின் விவரம்
வருமாறு: -
சென்னைக்கு பஸ்கள்
அரசு போக்குவரத்து கழகம் திருப்பூர் மண்டலத்தின் சார்பில் கொடைக்கானலுக்கு காலை 7. 30 மணிக்கும், மைசூருவுக்கு காலை 10. 30 மணிக்கும், மாலை 6. 30 மணிக்கும், சென்னைக்கு இரவு 8. 45 மணிக்கும், 9. 15 மணிக்கும், மார்த்தாண்டத்துக்கு இரவு 9. 30 மணிக்கும், பெங்களூருவுக்கு இரவு 9. 30 மணிக்கும், திருப்பதிக்கு மாலை 6. 30 மணிக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது.
கடலூருக்கு காலை 10. 30 மணிக்கும், இரவு 9. 30 மணிக்கும், திருவண்ணாமலைக்கு காலை 8 மணி, 9. 10 மணி, 10. 30 மணி, 10. 40 மணி, மதியம் 2 மணி, மாலை 5 மணி, இரவு 8. 45 மணி, 9. 20 மணி, 9. 50 மணி, 10 மணி, 10. 30 மணிக்கு இயக்கப்படுகிறது. திருப்பத்தூருக்கு காலை 5 மணிக்கும், இரவு 10 மணிக்கும், ஓசூருக்கு காலை 4. 50 மணிக்கும், தர்மபு ரிக்கு காலை 5. 45 மணிக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது.
5 நிமிடத்திற்கு ஒரு பஸ்
சேலத்துக்கு காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை 10 நிமிடத்திற்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. அதிகாலை 1 மணி முதல் பஸ் இயக்கப்படும். உடும்லைக்கு காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் இயக்கப்படும். அதிகாலையில் முதல் பஸ் 2 மணிக்கும், இரவு கடைசி பஸ் 11. 55 மணிக்கும் இயக்கப்படும்.
பொள்ளாச்சிக்கு காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் இயக்கப்படும். அதி காலை முதல் பஸ் 2. 50 மணிக்கும், இரவு கடைசி பஸ் 11 மணிக்கும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவைக்கு காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் இயக்கப்படும். முதல் பஸ் காலை 4. 15 மணிக்கும், இரவு கடைசி பஸ் 11 மணிக்கும் இயக்கப்படும். ஈரோட்டுக்கு காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் இயக்கப்படும். காலை முதல் பஸ் 4 மணிக்கும், இரவு கடைசி பஸ் 12 மணிக்கு இயக்கப்படும். பழனிக்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிடத் திற்கு ஒரு பஸ் இயக்கப்படும். அதிகாலை 4 மணிக்கு முதல் பஸ், இரவு 10. 45 மணிக்கு கடைசி பஸ் இயக்கப்படும். டவுன்பஸ்கள்ஊட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், புளியம் பட்டி, பண்ணாரிக்கும், குருவாயூருக்கும் பஸ்கள் இயக் கப்படுகிறது. இது தவிர காங்கயம், கொடுவாய், பல்லடம், மங்கலம், சோமனூர், குன்னத்தூர், ஊத்துக்குளி, அவினாசிக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. தனியார் பஸ்கள் மற் றும் மினி பஸ்களும் இங்கிருந்து இயக்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி