கடந்த 5 மாதங்களில் பருத்தி நூல் விலை கிலோவுக்கு ரூ. 61 முதல் ரூ. 66 வரை உயர்ந்துள்ளது. இந்த நூல் விலை உயர்வு குறித்து விவாதிக்க, பின்னலாடை உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், துணைத் தலைவர் பாலசந்தர், இணைச் செயலாளர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் தாமோதரன் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் தலைவர் சண்முகசுந்தரம், பின்னலாடை உற்பத்தியின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் கூட்டுக்கமிட்டி ஆலோசித்து அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.