திருப்பூர்: காதலிக்குமாறு வற்புறுத்திய கேரள வாலிபர் கைது

திருப்பூர் கருமாரம்பாளையம் பகுதியில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ரானாப் பிரதாப் யாதவ் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அசாம் மாநில பெண் வேலை பார்க்கும் துணிக்கடைக்கு கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ஷெபிக் (30) என்பவர் துணி வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது கடையில் வேலை பார்க்கும் பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு கூறி தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். இதுகுறித்து ரானாப் பிரதாப் யாதவ் திருப்பூர் வடக்கு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷெபிக்கை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி