மல்லிகைப்பூ கிலோ ரூ. 800-க்கு விற்பனை

திருப்பூர் பூ மார்க்கெட்டில் தொடர் சுப முகூர்த்த தினங்கள் காரணமாக பூக்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. முன்பு ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 400-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ. 800-க்கு விற்பனையாகிறது. முல்லைப் பூ ரூ. 240-ல் இருந்து ரூ. 400 ஆகவும், செவ்வந்திப் பூ ரூ. 400 ஆகவும், பட்டுப் பூ விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் இங்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி