அன்சாரி செய்தியாளர்களிடம் பேசுகையில் தற்போழுது உள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என வலியுறுத்தி வந்தோம். ஆனாலும் இதுவரை இட ஒதுக்கீடு உயர்த்தப்படவில்லை என்றும் கொங்கு மண்டல மாநாட்டின் வாயிலாக வெளிப்படுத்த உள்ளதாகவும் திருப்பரங்குன்றம் விஷயத்தில் பாஜக மதவெறுப்பு அரசியலை கையில் எடுத்துள்ளது என்றும் அப்பகுதி மக்கள் சகோதரர்கள் போல உள்ளதாக எடுத்துக்காட்டிய ஊடகங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எச். ராஜா பேசியதற்கு தமிழக அரசு வழக்கு தொடராதது கண்டிக்கத்தக்கது என்றும் அமைதிப் பூங்காவாக உள்ள தமிழகத்தில் மது மோதலை தூண்டும் நிகழ்வுக்கு தமிழக அரசு உறுதுணையாக செயல்படுத்துவது போல வருத்தம் அளிக்கிறது என்றும் கூறினார். இந்த நிகழ்வில் மாவட்ட, கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.