உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றனர். கலெக்டர் மனிஷ் நாரண வரே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழுடன் இணைய தமிழையும் காத்து வளர்ப்போம், அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட பிரசாரம் செய்வோம் என அனைவரும் உறுதியளித்தனர். மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகாராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி