இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்.. திருப்பூர் சிறுவன் சாதனை

திருப்பூர் கே ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த கௌதம் சந்தியா தம்பதியினர். இவர்களது மகன் யோகமித்திரன். 1 வயது 11 மாதம் சிறுவனான இவர் யாருடைய உதவியும் இல்லாமல் தானாகவே காய்கறிகள், பழங்கள், நிறங்கள், நட்சுகள் வகைகள், வாகனங்கள், துணி வகைகளின் பெயர்கள், சமையல் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், வன மற்றும் வீட்டு விலங்குகளின் பெயர்கள், உடல் பாகங்கள் உள்ளிட்டவற்றின் படத்தைப் பார்த்து அதன் பெயரை சரியாக கூறி வருகிறார். இவரது இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இவருக்கு சாதனைக்கான அங்கீகாரச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. குழந்தைப் பருவத்திலேயே இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி