திருப்பூரில் நெருப்பெரிச்சல் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 6 சிறுமியர் மற்றும் 3 சிறுவர்கள் மது அருந்திய நிலையில் போலீசாரால் கண்டறியப்பட்டனர். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்த போலீசார், ஒன்பது பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, பெற்றோரை வரவழைத்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.