குழந்தைகளுக்கு எதிரான எந்தவித குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பதும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவது குறித்து பெற்றோர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி கே.வி.ஆர். நகர் சரக உதவி ஆணையர் நாகராஜன் தலைமையில் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான சத்யா நகர் பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர். கணேஷ் குமார், திருப்பூர் மாநகர குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர். தெய்வமணி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினர். மேலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறித்து தகவல் தெரிந்தால் 1098 என்ற அலைபேசி எண்ணிற்கும் காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையான நூறு என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் காவல்துறையினரும் கலந்து கொண்டனர்.