திருப்பூர்: புதரில் கிடந்த மனித எலும்புக்கூடு; போலீஸ் விசாரணை

திருப்பூர்-ஊத்துக்குளி இடையே ரெயில்வே தண்டவாளம் அருகே புதரை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், மனித எலும்புக்கூடு ஒன்றைக் கண்டெடுத்தனர். எலும்புக்கூட்டைச் சுற்றி டீ-சர்ட் மற்றும் லுங்கி காணப்பட்டது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது கொலையா அல்லது வேறு ஏதேனும் சம்பவமா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி