மக்காச்சோளத்தில் மகசூலை அதிகரிப்பது எப்படி

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள் பொங்கலூர் தாலுகாவில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து செயல்முறை விளக்கங்களை அளித்து வருகின்றனர். குருநாதன்பாளையம் கிராமத்தில் மக்காச்சோளத்தில் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தைப் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்வதன் மூலம் வறட்சி சகிப்புத்தன்மை, அதிக முளைப்புத்திறன் மற்றும் மகசூல் கிடைக்கும் என விளக்கினர். நாரணநாயக்கன்புதூரில் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி