நேற்று (மார்ச் 15) இரவு இவரது வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து ஊத்துக்குளி போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே அப்பகுதியில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். அதற்குள் தீ வீட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவி வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமானது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்குளி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.