திருப்பூரில் தொழிலாளி கொடூரமாக கொலை

திருப்பூர் பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தம் அருகே இன்று அதிகாலை தலையில் கல்லை போட்டு ஒருவர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டவர் பிளாஸ்டிக் குப்பைகளை எடுத்து வாழ்ந்து வந்த தொழிலாளி என்றும், இரவு நேரத்தில் கடை முன்பாக தூங்கிக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களிடையே சைக்கோ கொலைகாரன் பற்றிய அச்சம் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி