திருப்பூர் மண்ணரை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன காவலாளி அய்யாதுரை (54), நேற்று முன்தினம் இரவு வேலை விஷயமாக வெளியே சென்றபோது, வீட்டின் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்கும்போது எதிர்பாராத விதமாக ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் திருப்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.