திருப்பூர் ஆண்டிபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்கள் பள்ளிக்குத் தேவையான பொருட்களை சீர்வரிசையாக மேளதாளத்துடன் எடுத்து வந்து தலைமை ஆசிரியை அமு தவள்ளியிடம் வழங்கினர். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு ஆசிரியர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது. பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் இந்தச் செயலைப் பெரிதும் பாராட்டினர்.