கேரள மாநிலம் மலப்புரம் தாவனூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (53), திருப்பூர் காலேஜ் ரோடு அய்யப்பன் கோவில் அருகே அறை எடுத்து தங்கியிருந்து, பங்களா பேருந்து நிறுத்தம் அருகே உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தில் அரசு ஊழியராகப் பணியாற்றி வந்தார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் பணிக்கு வராததால், சக ஊழியர்கள் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். அழைப்பு எடுக்கப்படாததால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள், தினேஷின் அறைக்குச் சென்று கதவைத் தட்டிப் பார்த்தனர். கதவு திறக்கப்படாததால் மேலும் அதிர்ச்சியடைந்தனர்.