திருப்பூர்: கஞ்சா வழக்கில் கைதான 3 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட வளர்மதி பாலம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மணிகண்டன் (வயது 26), சிவபாலன் (27), ரஹீம் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதை தடுக்கும் வகையில் அவர்களை ஒரு ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி