திருப்பூரில் குரூப்-1 தேர்வுக்கான இலவசபயிற்சிவகுப்புதொடக்கம்

திருப்பூரில் குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் மனிஷ் தொடங்கி வைத்தார். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இந்தப் பயிற்சியில், தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் திட்டமிட்டு படிப்பது, குறிப்பெடுப்பது, குழு விவாதம் நடத்துவது போன்ற முறைகள் பற்றி வழிகாட்டல் வழங்கப்படும். மாதம் இரு முறை மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. பயிற்சியில் சேர விரும்புவோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி