பின்னர் தனது நண்பர்களான சுந்தர், ஜோயல் மேத்யூ, சந்திரசேகர் ஆகியோருடன் திருப்பூர் ரயில் நிலையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அரை எடுத்து, ஊசி மூலம் அந்த போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று போதைப்பொருளை பயன்படுத்திய நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 1.180 மில்லிகிராம் அளவிலான மெத்தப்பெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து இந்த போதைப்பொருளை யாரிடம் இருந்து வாங்கினார் என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.