திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த லாரி டிரைவர், 2வது திருமணம் செய்துகொண்டார். அவரது 15 வயது வளர்ப்பு மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமானார். வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது கர்ப்பம் உறுதியானது. இது தொடர்பாக காவல்துறையினர் வளர்ப்பு தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.